kolli - 2026

மைதானத்தில் ஸ்ரீ வள்ளி ஸ்டெப் போட்ட கோலி! வைரல்!

சற்றுமுன் இந்தியா விளையாட்டு
kolli - 2026

அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியானது புஷ்பா படத்தின் முதல் பாகம். பாடம் வருவதற்கு முன்பே அனைத்து பாடல்களும் இணையத்தில் டிரெண்டடித்தன.

குறிப்பாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலுமான வேறு விதமான பாடி லாங்வேஜில் இருந்தார். மேனரிசமும் வித்தியாசமாக இருந்தது.

அதனை பாடலிலும் வெளிக்கொணர்ந்திருந்தார் அவர். அந்த வகையில் ஸ்ரீவள்ளி பாடலில் அவர் ஆடிய டான்ஸ் ஸ்டெப் படுபயங்கரமாக ஹிட்டடித்தது.

தோள்பட்டையைச் சாய்த்துக்கொண்டு அவர் போடும் அந்த ஸ்டெப் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என எல்லா பக்கமும் அல்லு அர்ஜூன் ஸ்டெப் பேமஸானது.

பலரும் அந்த ஸ்டெப்பை போட்டு வீடியோக்களை தெறிக்கவிட்டனர். ஸ்ரீவள்ளி ஜூரமானது சாதாரண மக்களையும் தாண்டி பிரபலங்களை தாக்கியுள்ளது.

எந்தவொரு டிரெண்ட் பாடல் வந்தாலும் அதில் வார்னர் வெர்சன் நிச்சயமாக இருக்கும். அவருக்குப் பின் ரவீந்திர ஜடேஜாவும் ஆட, வங்கதேசத்தில் நடைபெற்ற பிரீமியல் லீக்கில் பிராவோ, நஸ்முல் இஸ்லாம் அபு என வீரர்களில் பலர் இந்த ஸ்டெப்பை போட்டனர்.

இச்சூழலில் இந்திய முன்னாள் கேப்டன் கோலியும் மைதானத்தில் ஸ்ரீவள்ளி ஆட்டம் போட்டிருக்கிறார். நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது போட்டியின்போது ஓடியன் ஸ்மித் அடித்து உயர பறந்த பந்தை செம்மையாக கேட்ச் பிடித்தார் கோலி.

கேட்ச் பிடித்த களைப்பில் அப்படியே மைதானத்தில் சரிந்து பெருமூச்சுவிட்டார். இந்த கேட்ச் தான் இந்தியா ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்தது.

அந்த வகையில் இந்த கேட்ச்சை பிடித்துவிட்டு எழுந்து வந்த கோலி அல்லு அர்ஜூன் போட்ட அந்த ஸ்டெப்பை போட்டார்.

தற்போது கோலியின் ஸ்ரீவள்ளி ஸ்டெப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பல முறை மைதானத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் கோலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.