
விழுப்புரத்தில் வீட்டின் அருகே கீழே கிடந்த செல்போன், 2 ஆயிரம் பணத்தை அரசு பள்ளிமாணவன் எடுத்து வந்து விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
விழுப்புரம் நகரபகுதியான அமைச்சாரம்மன் கோவில் வீதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஜீவா தனது வீட்டின் வாயிலில் முன்பு கேட்பாரற்று கிடந்த பையினை எடுத்து பார்த்ததுள்ளான்.
அப்போது பையில் 15 ஆயிரம் மதிப்பிலான செல்போன், 2 ஆயிரம்
ரொக்க பணம், 3 ஏ டி எம் கார்டுகள் இருந்துள்ளன.
உடனே அந்தச் சிறுவன் அந்தப் பொருட்களை எடுத்து வந்து தன் தந்தையிடம் கொடுத்துள்ளான்,
உரிமையாளரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்றும் தன் தந்தையிடம் கூறியுள்ளான்.
இதனையடுத்து அந்த பணத்தையும், செல்போனையும் பள்ளி சிறுவன் விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து மாணவனை ஊக்குவிக்கும் விதமாக, எஸ். பி. நேர்மையாக செயல்பட்ட மாணவனை பாராட்டி சாக்லேட், பரிசினை வழங்கினார்.
மேலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக செயல்பட்ட அரசு பள்ளி மாணவனை போல் அனைத்து மாணவர்களும் செயல்பட வேண்டும் என எஸ் பி ஸ்ரீநாதா வலியுறுத்தியுள்ளார்.