Lizard - 2026

உணவகத்தில் இராட்சத பல்லி.. அலறி கதறிய பெண்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
Lizard - 2026

இளகிய மனம்கொண்டவர்களுக்கு கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி போன்றவற்றை பார்த்தால் பதற்றம் ஏற்படும்.

இதில் ஆண் – பெண் பேதமில்லை. சிலர் நாம் பார்த்தாலே பயம்கொள்ளும் பூச்சிகளை கைகளால் பிடித்து நம்மை அசரவைப்பார்கள்.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவில், உணவகம் ஒன்றில் இராட்சத பல்லி புகுந்துவிட்டது. இதனைக்கண்டு பதறிப்போன பெண்மணி ஒருவர், உணவகத்தின் நாற்காலியின் மீது ஏறி பதற்றத்தில் கதறி அழுகிறார்.

உணவகத்தின் ஊழியர் விரைந்து செயல்பட்டு பல்லியை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்.

பெண்மணி தொடர்ந்து கதறியழுத நிலையில், அவருடன் வந்திருந்த 2 பெண்கள் பாதுகாப்பாக தூர தள்ளிச்சென்று பெண்ணின் செயல்பாடுகளை கண்டு சிரித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.