கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப் பட்டுள்ளதால் ஐ.பி.எல். டி20 தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அண்மையில் கோல்கட்டா அணி வீரர்கள் சந்தீப் வாரியார், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும், ஐதராபாத் அணி வீரர்கள் விருத்திமான் சாஹாவுக்கும், தில்லி அணியின் அமித் மிஸ்ரா, சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14வது ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அட்டவணைப் படி, மே 30ஆம் தேதி வரை மொத்தம் 60 போட்டிகள் நடைபெற வேண்டும். ஆனால் 29 போட்டிகளே இதுவரை நடந்து முடிந்துள்ளன.