December 9, 2024, 10:10 AM
27.1 C
Chennai

டிராகன் கேப்ஸ்யூல் மூலம் பூமிக்கு திரும்பிய நால்வர்! வீடியோ!

nassa1
nassa1

ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் கேப்ஸ்யூல் விண்கலம் பாராசூட் உதவியுடன் வளைகுடா கடலில் தரையிறங்கியது. 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருளில் தரையிறங்கியது இப்போதுதான்.

க்ரூ டிராகன் கேப்ஸ்யூல் நான்கு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் பூமிக்கு திரும்பியது. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் புளோரிடாவில் நாசாவின் விண்வெளி வீரர்கள் தரையிறங்கினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஏறக்குறைய ஆறுமாத பயணத்தை தொடர்ந்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையம்
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்தது.

nassa2
nassa2

இதில் தங்கியிருந்த 4 விண்வெளி வீரர்கள் டிராகன் கேப்ஸ்யூல் மூலம் பூமிக்கு திரும்பினர். நான்கு வீண்வெளி வீரர்களில் மூன்று பேர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜப்பானியர் ஆவார். கேப்ஸ்யூல் பாராசூட் உதவியோடு மெக்சிகோ வளைகுடா கடலில் தரையிறங்கியது.

இந்த நான்கு விண்வெளி வீரர்களும் கடந்த நவம்பர் மாதம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 167 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு பூமிக்கு திரும்பி இருக்கின்றனர்.

அப்பல்லோ 8 குழுவினர் டிசம்பர் 27, 1968 அன்று பசிபிக் பெருங்கடலில் இரவு நேரத்தில் தரையிறங்கினர். இதுவே முதன் முறையாக இருந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இரவு நேரத்தில் டிராகன் கேப்ஸ்யூல் தரையிறங்கியது.

nassa4
nassa4

குடும்பங்களின் சார்பாக நன்றி
விண்கலத்தில் இருந்து கமாண்டர் மைக்கேல் ஹாப்கின்ஸ் முதலில் வெளிவந்தார்.

இதுகுறித்து ஹாப்கின்ஸ் நாசா டுவிட் செய்துள்ளது. அதில் க்ரூ-1 மற்றும் எங்கள் குடும்பங்களின் சார்பாக நன்றி சொல்ல விரும்புகிறோம்… மக்கள் ஒன்றிணையும் போது என்ன செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உலகத்தை மாற்றியமைக்கிறோம்., வாழ்த்துகள் திரும்பி வந்தது மிகவும் நன்று என குறிப்பிட்டுள்ளார். நாசாவின் விண்வெளி வீரரான ஷானன் வாக்கர் மற்றும் ஜப்பானின் சோச்சி நோகுச்சி ஆகிய வீரர்கள் விண்கலத்தில் இருந்தனர்.

ALSO READ:  தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!
nassa3
nassa3

நாசா புதிய நிர்வாகி பில் நெல்சன்
அதேபோல் விக்டர், மைக்கேல், ஷானன் மற்றும் சோச்சி ஆகியோரை வீட்டிற்கு வரவேற்கிறோம் எனவும் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அணிகளுக்கும் அவர்களின் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான மாற்றத்தை உறுதிப்படுத்த கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி என நாசா புதிய நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

எலான் மஸ்க் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ்
நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் 71 மில்லியன் மைல்கள் பயணம் மேற்கொண்டனர்.

எலான் மஸ்க் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ்
இதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. இதன்மூலம் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா கூட்டு உறுதித்தன்மை பெறுகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு நான்கு விண்வெளி வீரர்களும் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களுடன் இணைவார்கள் என தெரிவித்துள்ளனர்.

nassa
nassa

நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து மூன்றாவது முறையாக கடந்த மாதம் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப இருக்கிறது. க்ரூ 2 மிஷன் மூலம் விண்ணுக்கு செல்லும் நான்கு வீரர்களும் அடுத்த 6 மாதம் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

ALSO READ:  செல்போன், இண்டர்நெட் மூலம் மக்களை ஏமாற்றும் ஃப்ராடுகள் பலவிதம்! உஷார் மக்களே!

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடுகிறது.

ALSO READ:  திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week