2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக., வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டதும், திமுக., தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். முந்தைய அதிமுக., அரசில் அரசால் செயல்படுத்தப் பட்ட திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம் மீது சென்னையில் சில இடங்களில் இன்று காலை திமுக.,வினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
முகப்பேர் அம்மா உணவகத்தில் புகுந்த தொண்டர்கள் சிலர், அங்கிருந்த பெயர்ப் பலகைகளை உடைத்தும், காய்கறிகளை வாரி இறைத்தும், அங்கிருந்த ஊழியர்களை தரக்குறைவாகத் திட்டி, தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோக்கள் சமூகத் தளங்களில் வைரலானது.
இந்நிலையில், சென்னையில் முகப்பேர் – ஜெ.ஜெ.நகரில் அமைந்துள்ள அம்மா உணவகம் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனே காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக.,வினர் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, திமுகவில் இருந்து இருவர் நீக்கப்படுவதாக அக்கட்சி தெரிவித்தது.
சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவைச் சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப் படுவதாக தகவல் வெளியானது.
தாக்குதலுக்கு உள்ளான அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவு இட்டிருப்பதாக தகவல் வெளியானது.
தமிழக மக்கள் திமுக ஆட்சியை அச்சத்தில் பார்க்கின்றனர்.. திமுக ரவுடி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன தண்டனை தர போகிறார் தமிழக அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என இச்சம்பவத்தை எண்ணி தமிழக மக்கள் பயத்தில் உள்ளனர் .. என்று தகவல் வைரலானது…!
இந்நிலையில், சென்னை மதுரவாயில் அம்மா உணவகம் பெயர்ப்பலகையை உடைத்த 2 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப் படுவதாகவும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீண்டும் அம்மா உணவகம் பெயர்ப்பலகை அதே இடத்தில் வைக்கப்பட்டது என்றும், திமுக.,வின் மா சுப்பிரமணியன் எம்எல்ஏ சமூகத் தளத்தில் தகவல் வெளியிட்டார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் வைரலான வீடியோவில் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் காட்சியில் தென்படுகின்றனர். ஆனால் யாரோ இருவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார் திமுக , தலைவர் என்று கருத்துகள் பரப்ப பட்டு வருகின்றனர்.
அதே நேரம், இது போல் அராஜகங்களில் ஈடுபட்டுள்ள திமுக., நிர்வாகிகளை நீக்குவது போல் அறிக்கை விட்டு, அடுத்த இரு மாதங்களுக்குள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளதுதான் ஸ்டாலினின் நடவடிக்கை எடுக்கும் தன்மை என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.
சென்னையில் அம்மா உணவகம் சூறையாடப் பட்டதற்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில்…
1. சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
2. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!