ஒருவரின் உடலில் தொப்புள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் கருவில் இருக்கும் காலத்தில் இருந்தே தொப்புள் முக்கியப்பங்கை வகிக்கிறது. நமது உடலில் இருக்கும் பல பாகங்கள் நமது ஆளுமையை பற்றி கூறுவதாக உள்ளது. அதில் நமது தொப்புள் மிகவும் முக்கியமானதாகும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக இருப்பது நம்முடைய தொப்புள் ஆகும்.
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. பின் அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. பெண் கருத்தரிக்கும் பொழுது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் தான் குழந்தையை சென்று அடைகிறது. குழந்தை முழுவதும் வளர 270 நாட்களும், அதாவது 9 மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடையும்.
குழந்தை பொதுவாக வயிற்றுவலியின் காரணமாக அழும்போது தொப்புளை சுற்றி எண்ணெய் தடவி விடுவார்கள் ஏன் என்றால் தொப்புளில் ஏதேனும் நரம்புகள் வறண்டு போயிருந்தால் எண்ணெயை கொண்டு தடவும் போது நரம்புகள் தளர்ந்து சில நிமிடங்களில் வலி குணம் அடைந்து விடுகிறது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்டுள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புள் வடிவங்களின் ஆய்வு என ஓம்பலோமான்சி அறியப்படுகிறது. ஒரு பெண்ணின் தொப்புளின் வடிவத்தையும் அளவையும் பார்க்கும்போது, ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பதையும் இந்த அறிவியல் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி நமது குணநலன்கள் மட்டுமின்றி நம்மைப் பற்றிய பல உண்மைகளை கூறக்கூடும். உங்கள் தொப்புளின் வடிவம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
வட்ட வடிவிலான தொப்புள்
தொப்புள் வட்ட வடிவில் இருந்தால் அவர்கள் நம்பிக்கையான ஆளுமையை கொண்டிருப்பதற்கான அறிகுறி ஆகும். அனைத்திலும் இருக்கும் நல்ல விஷயத்தை பார்க்கும் நல்ல குணம் வாய்ந்தவர்கள் இவர்கள். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், மற்றவர்களுடன் சுமூகமான உறவை பராமரிப்பதிலும் இவர்கள் சிறந்தவராக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் துணையிருக்கும்.
பெரிய தொப்புள்
பெரிய மற்றும் ஆழமான தொப்பை தொப்புள் இருந்தால், அது அவர்கள் தாராள ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தாராள மனப்பான்மைக்கு எல்லை என்பதே இருக்காது. அனைத்து வயதினருடன் சமமாக பழகும் குணம் கொண்டவர். மேலும் இவர்களின் புத்திக்கூர்மை வயது அதிகரிக்க அதிகரிக்க மேலும் கூர்மையாகும். இவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள்.
சிறிய தொப்புள்
ஆழமற்ற மற்றும் சிறிய தொப்புள் ஒருவரின் ஆளுமையின் இருண்ட பரிமாணத்தைக் குறிக்கிறது. இவர்கள் ரகசியங்களை பாதுகாப்பதில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை இவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவர்களிடம் இருக்கும் ரகசியங்களையும், இவர்களின் இருள் பக்கத்தையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது.
புடைப்பான தொப்புள்
நீண்ட புடைப்பான தொப்புள் கொண்டவர்கள் வலிமையான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்திற்கும் பிடிவாதம் பிடிப்பவர்களாக இருப்பார்கள். தங்கள் கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். இவர்களுக்கு பொருத்தமான காதல் துணை கிடைப்பது மிகவும் கடினமாகும், ஆனால் கிடைத்து விட்டால் அந்த உறவு இறுதிவரை நிலைத்திருக்கும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் தீர்வு பெறும் நோய்கள் : தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி யாடையமால் குளிர்ச்சி பெரும். கண்பார்வை குறைபாடு வராது , பித்த வெடிப்பு குறையும் , கணையம் பிரச்சினைகள் குணமாக்கி விடும், முடி பளபளப்பாக பொலிவு பெரும், உதடுகள் மென்மையாக இருக்கும் மற்றும் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலி போன்றவற்றை தீர்க்க உதவுகின்றன.
நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. மேலும் நம் உடலின் சில உறுப்புக்கள் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மறைமுகமாக சுட்டிக் காட்டும். உதாரணமாக, நம் கைகள், நாக்கு, கருவிழியின் நிறம் போன்றவை நமக்கு எந்த வகையான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்பதைச் சொல்லும்.
அதேப் போல் நம் தொப்புள் வடிவமும் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் என்பது தெரியுமா? நம் தொப்புளின் வடிவத்தைக் கொண்டு ஒருவர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா, இல்லையா, எந்த நோயின் தாக்குதல் அதிகம் இருக்கும் போன்றவற்றை சொல்ல முடியும்.
உங்கள் தொப்புளினுள் கட்டிப் போன்று ஏதோ ஒன்று நீட்டிக் கொண்டுள்ளதா? அதிலும் அது அப்படியே இருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் பெரிதாகிக் கொண்டே போனால், அது ஹெர்னியாவாக இருப்பதற்கான முதல் அறிகுறியாகும். எனவே உங்களுக்கு இம்மாதிரியான தொப்புள் இருந்தால், அதனை அடிக்கடி கவனியுங்கள். அது வளர்கிறதா என்பதை கூர்ந்து நோக்குங்கள்.
சிலருக்கு தொப்புளினுள் சிறிதான ஒரு கட்டி போன்று இருக்கும். இம்மாதிரியான தொப்புள் வடிவத்தைக் கொண்டவர்கள் அடிக்கடி காய்ச்சலால் அவஸ்தைப்படுவதோடு, வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
உங்கள் தொப்புள் சுருங்கி இருந்தால், செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவீர்கள். மேலும் இந்த வகை தொப்புள் வடிவத்தைக் கொண்டவர்கள், தங்கள் உடல் எடையிலும் பிரச்சனையை சந்திப்பார்கள்.
கண் அல்லது பாதாம் வடிவில் தொப்புளைக் கொண்டவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனையை சந்திக்க நேரிடுவதோடு, தசை மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.
படத்தில் உள்ள தொப்புள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் இந்த வடிவ தொப்புளைக் கொண்டவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் சரும நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, அது குழந்தைகளுக்கும் பரவுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒருவர் மரணம் அடைந்த பிறகும் தொடர்ந்து 3 மணி நேரம் தொப்புள் சூடாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை.