மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில், மூன்று கிளைகளில் தண்ணீர் விழுகிறது
தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் பரவலாக அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள குற்றாலத்திலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இன்றி வெறும் பாறையாகவே காட்சியளித்தது.
இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் மூன்று கிளைகளில் தண்ணீர் விழுகிறது.
இருப்பினும், தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அருவிகளில் குளிக்க பொதுமக்கள் எவரும் செல்லவில்லை.