ஒரு பெண்ணுக்கு போலியான லாட்டரி டிக்கெட் அனுப்பி ஐந்து லட்ச ரூபாய் ஏமாற்றிய கூட்டத்தை போலீசார் தேடி வருகிறார்கள் .
கர்நாடகாவின் பெங்களூருவில் 37 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார் ,அவர் பிப்ரவரி 4 ஆம் தேதி, ஒரு பார்சல் கடிதத்தைப் பெற்றார்.
அதற்க்குள் இருந்த கடிதத்தில் அவர் ஒரு அதிர்ஷ்ட லாட்டரி டிக்கெட்டின் மூலம் ரூ .1 லட்சம் ரொக்கம் மற்றும் ஸ்க்ராட்ச் கார்டுகளை வென்றதாக கூறப்பட்டிருந்தது .
அதனால் அந்த பெண் அதிலிருந்த போன் நம்பரை தொடர்பு கொண்டார் .அப்போது அவரிடம் பேசிய நபர்கள் அந்த பெண்ணின் அக்கௌன்ட் நம்பரை வாங்கிக்கொண்டனர்.
பிறகு அவருக்கு அந்த பரிசு தொகையை அனுப்ப பல்வேறு விதமான வரி, செயலாக்கம், ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்களைக் கட்ட வேண்டுமென்று கூறி பல தவணைகளில் ஐந்து லட்ச ரூபாயையை பெற்று கொண்டனர். ஆனால் அவர்கள் சொன்னபடி அவருக்கு பரிசு தொகையை அனுப்பவில்லை. இதனால் அந்த பெண் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதையுணர்ந்தார் .