வீட்டில் சிறை செய்யப்பட்ட மூதாட்டி.. wordle விளையாட்டால் மீட்பு!

wordle - 2026

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் நபரிடம் பிணைக்கைதியாக சிக்கிக் கொண்ட 80 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினர் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளது, உலகப் புகழ் பெற்ற ‘Wordle’ வேர்டில் என்ற விளையாட்டு.

இது ஒருவகை வார்த்தை விளையாட்டு. கடந்த ஆண்டு அக்டோபரில்தான் இது உலக அளவில் பிரபலமானது. ஓர் ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டின் சாராம்சம்.

சில கட்டங்களில் ஐந்தெழுத்து வார்த்தை மறைந்திருக்கும். இதை ஆறு வாய்ப்புகளில் கண்டுபிடிக்க வேண்டும். நாம் எழுதும் எழுத்து, கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தையில் சரியான கட்டத்தில் இருந்தால், அந்தக் கட்டம் பச்சையாக மாறும்; தவறான இடத்தில் இருந்தால் மஞ்சளாக மாறும்.

ஒருவேளை நாம் கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தைக்கு சற்றும் சம்பந்தமில்லாத எழுத்தாக இருந்தால் சாம்பல் வண்ணமாக மாறும். இந்த வார்த்தை விளையாட்டை இப்போது தினமும் உலகம் முழுதும் பலரும் கொண்டாடி விளையாடுகின்றனர்.

இச்செய்தியில் வரும் மூதாட்டியும் அவரது குடும்பத்தாரும் கூட குடும்பமாக வேர்டில் விளையாட்டை விளையாடுகின்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார் டெரைஸ் ஹோல்ட். 80 வயது மூதாட்டியான இவர் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது ஜேம்ஸ் டேவிஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 32 வயது இளைஞர், அந்த மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்துள்ளார். ஜன்னலை உடைத்து அதன் வழியாக வீட்டினுள் ஆடைகள் இல்லாமல் நுழைந்த அவர் மேல் முழுவதும் கண்ணாடி கிழித்த காயங்கள் இருந்துள்ளன.

Teres Holt - 2026

அந்த நபருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மூதாட்டி ஹோல்ட்டை கத்தரிக்கோல் முனையில் ‘கொன்றுவிடுவேன்’ என டேவிஸ் அச்சுறுத்தியுள்ளார். பின்னர், அந்த மூதாட்டியை வீட்டின் தரைத்தளத்துக்கு மிரட்டி அழைத்துச் சென்று அங்கேயே சிறை வைத்தார்.

அன்றைய தினம் வழக்கம்போல் ஹோல்ட் அவரது மகள் கால்ட்வெல்லும் வேர்டில் ஸ்கோரை அனுப்பவில்லை. அடுத்த நாளான பிப்ரவரி 6-ஆம் தேதியும் ஹோல்ட் ஸ்கோர் அனுப்பவில்லை. மகளிடம் பேசவும் இல்லை.

இதனால் சந்தேகமடைந்த ஹோல்ட் கால்ட்வெல், சிகாகோ போலீஸாரை தொடர்பு கொண்டார். அவர்கள் புகாரின்படி மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர் அங்கு பிணைக்கைதியாக இருப்பது தெரியவந்தது.

போலீஸார் டேவிஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டேவிஸ் ஒத்துவரவில்லை. பின்னர் அதிரடிப்படையினர் டேவிஸை தாக்கி அந்த மூதாட்டியை மீட்டனர்.

டேவிஸ் மீது வீடுகளில் நுழைதல், பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபடுதல் போன்ற குற்றங்கள் உள்ளன. அவரை போலீஸார் கைது செய்தனர்.

வேர்டில் ஸ்கோர் வராததை வைத்து தாய்க்கு ஏதோ பிரச்சினை என அறிந்துகொண்டதாக கால்டுவெல் கூறினார்.

மூதாட்டி டேவிஸ் கூறும்போது, ”நான் உயிருடன் திரும்புவேன் என்று நினைக்கவில்லை. இப்படியான சம்பவங்கள் நடக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் எனக்கே நடந்துள்ளது. இதிலிருந்து மீண்டது எனது அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories