பிரதோஷம்: காருக்குறிச்சி ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயிலில் 1008 செவ்விளநீர் அபிஷேகம்!

Published:

karakurivhi sivan - 2026

திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயிலில் இன்று (பிப்.,14) 1008 செவ்விளநீர் அபிேஷகத்துடன் பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணிக்கு துவங்குகிறது.

சேரன்மகாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் ரோட்டில் உள்ள இக்கோயிலில் பிரதோஷ பூஜையில் சுவாமி, அம்பாள், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்படும்

மாலை 5:30 மணிக்கு ஒருவர் 20 விளக்குகள் வீதம் 1008 தீபங்களை ஒரே நேரத்தில் ஏற்றும் வைபவம் நடைபெறும். சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் மூன்று முறை 1008 தீப ஒளியின் நடுவில் பவனி வருவார்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது.

திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது

Related articles

Recent articles

spot_img