tirupati tirumalai - 2026

திருமலையில் மீண்டும் இலவச நேரடி டிக்கெட் வழங்கல்….

இந்தியாவில் மிக பிரபலமான திருமலை ஸ்ரீ னிவாசபெருமாளை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்ற மடைபவர்கள் வசதிக்காக திருமலையில் பக்தர்களுக்கு நேரடி இலவச தரிசன டிக்கெட் நாளை புதன்கிழமை முதல் விநியோகம்!

இதனால் திருமலையில் நாளை முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் ரூ300 மற்றும் இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் வெளியிட்ட சில நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவாகி விடுகிறது.

இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் திருமலையில் பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

thirupathi 1 - 2026
thirupathi 1

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதாலும் ஆன்லைன் டிக்கெட் வசதிபெற முடியாதவர்களுக்காகவும் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதியில் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் நாளை புதன்கிழமை16ம் தேதி காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து தினமும் 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜசுவாமி 2வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஒப்புதலின் பேரில் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி, இம்மாதம் நடைபெற இருக்கும் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending