ராஜ்தானி எக்ஸ்பிரஸில் தூளான பைக்.. நொடியில் தப்பிய இளைஞர்!

Published:

train - 2026

மும்பையில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் மோதி இருசக்கர வாகனம் ஒன்று சுக்குநூறானது.

ஓடும் ரயிலின் முன் இருசக்கர வாகனம் எங்கிருந்து வந்தது என்பதை வைரல் வீடியோ தெளிவாக காட்டுகிறது.

அதன்படி ரயில் வரும் முன் தண்டவாளத்தை கடந்துவிடலாம் எனும் அசுர நம்பிக்கையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

பின் ரெயில் அதிவேகமாக வருவதை சுதாரித்து கொண்ட நபர் தண்டவாளத்திற்க முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிடுகிறார். எனினும், இருசக்கர வாகனம் அவர் கைநழுவி கீழே விழுகிறது. பின் அதனை எடுப்பதற்கு முன் ரயில் மோட்டார்சைக்கிளை இழுத்துச் சென்றுவிட்டது.

இதனிடையே ரயிலில் தானும் சிக்கிவிடக் கூடாது என்பதால் துளியும் தாமதிக்காமல் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரயிலில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

எனினும், அதிவேகமாக வந்த ரயில் மோட்டார்சைக்கிளை சுக்குநூறாக பிளந்ததை அடுத்து அதன் பாகங்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மட்டுமின்றி ரயில்வே கிராசிங்கில் இருந்த மற்றவர்களுக்கும் காயம் ஏற்படுத்தும் வகையில் பறந்தது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

வீடியோவின் படி இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரயில்வே கிராசிங்கில் விதிமீறலில் ஈடுபட்டது மிக தெளிவாக பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதை அடுத்து ரயில்வே கிராசிங்கில் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுவோரை நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img