stalin - 2026

#Justice for Lavanya: ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு!

சற்றுமுன் இந்தியா
stalin - 2026

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் தமிழக முதல்வர் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி ஸ்டாலின் உருவ பொம்மையை தில்லியில் உள்ள ஏ.பி.வி.பி மாணவர்கள் எரித்தனர்.

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் இதுவரை தமிழக அரசு மாணவியின் குடும்பத்திற்கு ஆதரவாக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்தபட்சம் லாவண்யாவின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட ஸ்டாலினோ மற்ற அமைச்சர்களோ கட்சிக்காரர்களோ கூறவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லாவண்யா தற்கொலையை மூடி மறைக்க ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும் இதனை கண்டித்து தில்லியில் உள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தமிழ்நாடு இல்லம் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்ததகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.