
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியனுக்கு சிறந்த சிறார் அறிவியல் எழுத்தாளர் விருது!
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் நமது தினசரி மின் நாளிதழில் தினமும் ஆன்மீக கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர் பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை பற்றிய கட்டுரைகள், தற்போதும் 250 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து வரும் திருப்புகழ்க் கதைகள் கட்டுரைகள், பாரதியாரின் கண்ணன் பாட்டு தொடர்பான கட்டுரைகள், கிரிக்கட் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள், கால்பந்து போட்டிகள் என விளையாட்டு தொடர்பான கட்டுரைகள் ஆகியவற்றை அவர் எழுதிவருகிறார். பாரதப் பிரதமர் மோதி அவர்களின் இராமாநுஜர் சிலைத் திறப்புவிழா உரையைக் கூட அவர் மொழிபெயர்த்து எழுதினார்.
பல்வேறு அறிவியல் சார்ந்த இதழ்களில் அறிவியல் கட்டுரைகளை எழுதி வரும் எழுத்தாளர், முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியனுக்கு நேற்று சென்னையில் நடந்த 45ஆவது புத்தகக் காட்சி தொடக்க விழாவில் நெல்லை.சு.முத்து அவர்களின் சிறந்த சிறார் அறிவியல் எழுத்தாளர் விருது வழங்கப்பட்டது. தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர்

பத்திரிகையாளர் திரு சமஸ் – உரைநடை
நாடகம் – திருமதி பிரசன்னா ராமசாமி
கவிதை – திரு ஆசைத்தம்பி
புதினம் – திருமதி அ. வெண்ணிலா
பிறமொழி – மலையாள எழுத்தாளர் திரு பால் சக்காரியா
ஆங்கிலம் – திருமதி மீனா கந்தசாமி
ஆகியோருக்கு கலைஞர் பொற்கீழி விருதுகளையும், பபாசி விருதுகளை
திரு ச.மே. மீனாட்சி சோமசுந்தரம்,
திரு ரவி தமிழ்வாணன்,
திருமதி பொன்னழகு,
திருவை பாபு,
முனைவர் தேவிரா,
திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோருக்கும்,
சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை.சு. முத்து விருதினை முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியனுக்கும் வழங்கினார்.
மாலை 0530 மணிக்குத் தொடங்கிய விழாவில் குமரன் பதிப்பக உரிமையாளரும், பபாசியின் தலைவருமான திரு எஸ்.வைரவன் வரவேற்புரை வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார். தமிழக முதல்வர் சிறப்புரை ஆற்றினார். பபாசியின் செயலரும் நாதம் கீதம் புக்ஸ் பதிப்பகத்தின் திரு எஸ்.கே முருகன் நன்றியுரை வழங்கினார்.
நமது எழுத்தாளர் முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- கமலா முரளி