பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றி!

Published:

BrahMos Supersonic Cruise - 2026

இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து நடத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது

ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, அதிவேகத்தில் மிக துல்லியமாக இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

BrahMos Supersonic Cruise2 - 2026

மேலும் எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறனையும் பெற்றது. இந்த ஏவுகணை சுமார் 400 கிமீ பயணம் செய்து இலக்கை தாக்கும் தன்மை கொண்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்தச் ஏவுகணைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், கப்பல் அல்லது விமானத்தில் இருந்தும் ஏவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BrahMos Supersonic Cruise 1 - 2026

இந்நிலையில் நேற்று இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த சோதனை வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்த பரிசோதனை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை மேம்பாட்டில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது.

முழுவதும் உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின், சோதனை வெற்றி பெற்றிருப்பது இந்திய கடற்படையின் வலிமையை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

Related articles

Recent articles

spot_img