viral - 2026

அடுக்குமாடியில் நுனியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த நபர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
viral - 2026

தில்லிக்கு அருகேயுள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஃபரீதாபாத் நகரம் மீண்டும் ஒரு வைரல் வீடியோவால சோசியல் மீடியாவில் அடிபட ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரம் 8வது தளத்தில் விழுந்துவிட்ட ஆடையை எடுப்பதற்காக 9வது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டால் கட்டி கீழே இருக்கும் வீடியோ வெளியே கடும் விமர்சனங்களை குவித்தது.

பெற்ற மகனின் உயிரை துணிக்காக பணயம் வைத்த தாயை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். இதுகுறித்து ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், “என்னை மன்னித்துவிடுங்கள், இச்சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது எனக்கு தெரியாது” என சிறுவனின் தாய் மன்னிப்பு கோரியிருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு அடுத்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மீண்டும் அதே ஃபரீதாபாத் நகரில் அமைந்துள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனி கம்பிகளை பிடித்துக்கொண்டு அடையாளம் தெரியாத நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நபர் படமாக்கியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் பெண் ஒருவர் ஆச்சர்யத்துடன் “அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறாரா?” என கேட்பதும் பதிவாகியுள்ளது.

பால்கனியின் கம்பிகளை பிடித்துக்கொண்டு Push Up செய்யும் அந்த நபர், உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் மேலே வரும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் இப்படி உயிரை பணயம் வைத்து உடற்பயிற்சி செய்து வரும் நபரை சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உடலினை உறுதி செய்யவும், ஆரோக்கியமாக வாழவும் தான் உடற்பயிற்சி தேவையே தவிர, இப்படி உயிரைப் பணயம் வைத்து தேவையில்லாத சாகசங்களை செய்வதற்கு கிடையாது என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இதுபோன்ற நபர்கள் செய்யும் செயல்கள் தான் குழந்தைகளை தவறாக வழிநடத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.