air - 2026

ஏர் டாக்ஸி சேவை.. விரைவில் தொடக்கம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
air - 2026

விமானப் பயணம் என்பது பலருக்கும் கனவாக இருக்கும் இன்றைய சூழலில், அந்த கனவுகள் கண்முன்னே நனவாகப்போகும் காலங்கள் விரைவில் வர இருக்கின்றன.

இந்த ஏர் டாக்ஸி பயணங்கள் சிங்கப்பூரில் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் அடுத்த 2 ஆண்டுகளில் ஏர் டாக்ஸி சேவை தொடங்கும்.

பிரபலமான நகரங்களான மரினா பே மற்றும் சென்டோசா நகரங்களில் 10 முதல் 20 விமான டாக்ஸிகள் முதன் முதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வோலோகாப்டர் என்ற நிறுவனம் ஏர் டாக்ஸி சேவையை வழங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ள வோலோகாப்டர், அடுத்தகட்டமாக ஆசிய நாடுகளுக்கும் ஏர் டாக்சிஸி சேவையை விரிவாக்கம் செய்வதை இலக்காக கொண்டுள்ளது.

இதுகுறித்து முதற்கட்டமாக நகரப் பகுதிகளின் அமைப்பு, தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுகளை வோலோகாப்டர் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில், ” அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஏர் டாக்சி சேவையை சிங்கப்பூரில் தொடங்குகிறோம். முதலில் மரினா பே உள்ளிட்ட நகரங்களில் தொடங்கும் தங்கள் நிறுவனத்தின் சேவை, அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளோம்.

இதன் மூலம் தொலைதூர பயண சேவைக்கான நேரம் வெகுவாக குறையும்” எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஏர்டாக்ஸிக்கு தேவையான லைசென்ஸ் அனுமதியை வோலோகாப்டர் நிறுவனம் இன்னும் பெறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.