
பாதாம் ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
பட்டாணி – 1/4 கப்
ஸ்வீட் கார்ன் – 1/4 கப்
உடைத்த பாதாம் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 2
இஞ்சி – 1″ துண்டு
கிராம்பு – 2
இலவங்கப்பட்டை – 1
ஏலக்காய் – 2
குழம்பு பொடி – 1 1/2 ஸ்பூன்
ஸ்டாக் – 2 கப்
நெய் – 4 ஸ்பூன்
எண்ணெய்
செய்முறை
அரிசியை 10 நிமிடங்கள் ஊற.வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில். எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சி சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
பின்னர் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து ஒரு மேலும் 2 நிமிடங்கள் வதக்கி குழம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அரிசி, பட்டாணி, ஸ்வீட் கார்ன் உடைத்த பாதாம் சேர்த்து வெஜ்/சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும்.
மீதி பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.