
காஜர் ரைஸ்
தேவையான பொருட்கள்
கேரட் – ஒரு கப்
சீரகசம்பா அல்லது பாஸ்மதி அரிசி – அரை கிலோ
நெய் – 2 மேசைகரண்டி
பட்டை – ஒன்று
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
அன்னாசி பூ – ஒன்று
பிரிஞ்சி – ஒன்று
கறிவேப்பிலை – 2 கொத்து
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சிபூண்டு விழுது – 4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
செய்முறை
பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, பிரிஞ்சி சேர்க்கவும். பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
கேரட் லேசாய் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் சுத்தம் செய்த அரிசியை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். இப்படி செய்வதனால் சாதம் உதிரி உதிரியாக வரும்.
அதன் பின்னர் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற கணக்கில் நீர் சேர்த்து கொதிக்க விடவும். இது போல் பாதி நீர் வற்றிய சமயத்தில் அடுப்பை சிறுதீயில் வைத்து தம்மில் 15 நிமிடங்கள் போடவும்.
சன்னா, உருளை மசாலா, ரைத்தா உடன் சாப்பிட நல்ல காம்பினேசன்