guru - 2026

குருவாயூர் கிருஷ்ணனுக்கு பால் பாயாசம் தயாரிக்க 2000கிலோ எடையில் நாலுகாத்தான் உருளி…

சற்றுமுன்

பூலோக வைகுண்டம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் உன்னி கிருஷ்ணன் பிரபலம் என்றால் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நிவேத்தியம் படைக்கப்படும் பால் பாயாசம் பிரசாதம் மிக பிரபலமானது.பால்பாயாசம் தயாரிக்க பக்தர் ஒருவர் காணிக்கையாக இரண்டாயிரம் கிலோ எடையில் ‘நாலுகாத்தான் உருளி’ (பெரிய பாரம்பரிய சமையல் பாத்திரம்) வழங்கியுள்ளார். கோவிலில் இந்த உருளியில்தான் ‘ஏட்டாம் விளக்கு’ திருவிழாவிற்கான ‘பாயாசம்’ தயார் செய்யப்படும்.

கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட சமையல் பாத்திரம் கிரேன் உதவியுடன் கோயிலின் சமையலறைக்கு மாற்றப்பட்டது. 2000 கிலோ எடையுள்ள ‘உருளி’யைக் கொண்டு ஆயிரம் லிட்டர் ‘பாயாசம்’ தயாரிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை இந்த புதிய ‘உருளியில் அதிகாரப்பூர்வ பிரசாதம் தயாரித்து வழங்கப்பட்டது.

பாலக்காட்டைச் சேர்ந்த கோடல்வல்லி மண பரமேஸ்வரன் நம்பூதிரி இந்த பெரிய சமையல் பாத்திரத்தை கோயிலுக்கு வழங்கினார். பருமலா பந்தல்லூர் தெக்கேத் காட்டுபுரத் ஆனந்தன் ஆச்சாரி மேற்பார்வையில் பாத்திரம் தயாரிக்க இரண்டு மாதங்கள் ஆனது.

guru - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.