ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால்
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,719 ஆக இருந்தது. இன்று இது ரூ.4,827 ஆக உயர்ந்துள்ளது. பவுன் ரூ.37,752-ல் இருந்து ரூ.38, 816 ஆக அதிகரித்தது.
ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மதியம் இரண்டாவது முறையாக உயர்ந்தது. தொடர்ந்து மாலை வேளையில் 3-வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலையும் உருவாகி உள்ளது.கடந்த நாட்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது.மாறாக இன்று மூன்று முறை உயர்ந்தது.
இந்த நிலையில் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.68.70 ஆக இருந்த வெள்ளி விலை இன்று ரூ.72.70 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.68,700-ல் இருந்து ரூ.72,700 ஆக அதிகரித்துள்ளது.
