.
சென்னை மேயர் வேட்பாளராக பிரியா 28 வயது பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 340 வருட சென்னை மாநகராடசி வரலாற்றில் இவர் இரண்டாவது பெண் மேயர். இதற்கு முன்பு 1971 ஆம் ஆண்டு திமுக சார்பில் காமாக்ட்சி ஜெயராமன் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் மார்ச் 4இல் நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்,துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிடப்படுகிறது சென்னை மேயர் பதவிக்கு பிரியா துணை மேயர் பதவிக்கு மு. மகேஷ் குமாரும் ,மதுரை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு இந்திராணியும்,
திருச்சி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மு.அன்பழகனும், துணை மேயர் பதவிக்கு திவ்யா தனக்கோடியும் போட்டியிடுகிறார்கள்.
கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கல்பனாவும், துணை மேயர் பதவிக்கு இரா. வெற்றிச்செல்வனும் ,
சேலம் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு ஏ.இராமச்சந்திரனும், திருப்பூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தினேஷ் குமாரும், ஈரோடு மாநகராட்சியில் மேயர் பதவிக்கு நாகரத்தினமும், துணை மேயர் பதவிக்கு செல்வராஜூம் போட்டியிடுகிறார்கள்.
ஆவடி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு ஜி. உதயகுமார், தாம்பரம் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் பதவிக்கு ஜி.காமராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மகாலட்சுமி யுவராஜ், வேலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் பதவிக்கு சுனிலும் போட்டியிடுகிறார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மகேஷ், துணை மேயர் பதவிக்கு மேரி பிரின்சியும் போட்டியிடுகிறார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பி.எம். சரவணன், துணை மேயர் பதவிக்கு கேர்.ஆர் ராஜூவும் போட்டியிடுகின்றனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு என்.பி.ஜெகன், துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ்,
கடலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சுந்தரி, தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சண்.இராமநாதன், துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு தமிழழகனும் போட்டியிடுகிறார்கள்.
கரூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கவிதா கணேசனும், துணை மேயர் பதவிக்கு தாரணி பி.சரவணனும் ,ஓசூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் பதவிக்கு சி.ஆனந்தைய்யா, திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு இளமதி, துணை மேயர் பதவிக்கு இராஜப்பா, சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிக்கு சங்கீதா இன்பம், துணை மேயர் பதவிக்கு விக்னேஷ் பிரியாவும் போட்டியிடுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.




