madurai chithirai function inspection - 2026

சித்திரை திருவிழா இடத்தை ஆய்வு செய்த மேயர், துணை மேயர்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai chithirai function inspection - 2026

சித்திரைத் திருவிழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து, மரம் நட்ட மதுரை மேயர் மற்றும் துணை மேயர்

உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடந்து முடிந்தது, இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது.

இதில் பக்தர்கள் அனுமதியுடன் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, அதற்கான பணிகளில் கோவில் நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் தற்போது நிரந்தர பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சித்திரை திருவிழாவின் போது என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்பது குறித்து மதுரையின் புதிய மேயராக பதவி ஏற்ற இந்திராணி பொன்வசந்தம் மற்றும் துணை மேயராக பதவி ஏற்ற நாகராஜன் ஆகியோர் கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் ஓபுளாபடித்துறை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியை ஆய்வு அங்கு மரக்கன்று நட்டு சென்றனர். அவர்களுடன் மதுரை ஆணையாளர் கார்த்திகேயன் உடனிருந்தார் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.