திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

Thirupathi - 2026

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி 10 நாட்களுக்குமேல் ஆகிறது.

பக்தர்கள் சிரமமில்லாமல் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப அன்னதானம் வழங்கப்படும்.

இதுதொடர்பாக அன்னதானத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவுடன் ரொட்டியும், சப்பாத்தியும் வழங்கப்படும்.

திருமலையில் மேலும் இரு பகுதிகளில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளை மீண்டும் தொடங்க கால அவகாசம் எடுத்துள்ளோம்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல், கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று வரை உயர்த்தவில்லை.

தற்போது அதை உயர்த்தும் எண்ணமும் இல்லை. சாதாரணப் பக்தர்களுக்கு விரைவான தரிசனம் வழங்கப்படும். இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அதற்காக அவர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலவச தரிசன டிக்கெட் பெறும் சாதாரணப் பக்தர்கள் அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

அதற்காக திருப்பதி, திருமலையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமலையில் உள்ளூர் ஓட்டல்களும், துரித உணவகங்களும் வழக்கம்போல் செயல்படும்.

அதன் உரிமையாளர்களுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை. திருமலையில் பல்வேறு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்க கவுண்டர்கள் அமைக்கப்படும்’ என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories