அரியலூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை டி.பழூர் போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலுார் மாவட்டம், டி.பழூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோப்பு தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை, 39, என்பவர் ஐந்து பேருடன், இதே பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் ஆயுதங்களுடன் நின்றிருந்தார். அவர்கள் 5 பேரையும் மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர் விசாரணையில், கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக, 5 பேரும் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.இச் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




