தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,
இன்று முதல் ரூ20, மற்றும் ரூ250கட்டணதரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இது குறித்து, கோவில் இணை ஆணையர் குமரதுரை கூறியுள்ளதாவது: திருச்செந்தூரில் கோவிலில் 250 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம், 100 ரூபாய் கட்டண வரிசை, 20 ரூபாய் கட்டண வரிசை, கட்டணமில்லாத பொது தரிசனம் ஆகிய நான்கு வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பாகுபாடை தவிர்க்க, 250 மற்றும் 20 ரூபாய் கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது. இலவச பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டணம் ஆகிய இரு வழிகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
கோவில் மகா மண்டபத்திற்கு பிறகு, இருவழி பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களை திரிசுதந்திரர்கள் அழைத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையோடு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வி.ஐ.பி., தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இன்று முதல் 15 நாட்கள் இந்த புதிய முறைகள் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





