IMG 20220310 WA0000 - 2026

அதிரடியாக விலை சரிவடைந்த தங்கம்…

சற்றுமுன்

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது . இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.40,000 கீழ் வந்தது. தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம் என்பதால் இன்றைய தங்கம் விலை வீழ்ச்சி நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 110 ரூபாய் குறைந்து ரூ.4,910க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.39,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,309 எனவும் ஒரு சவரன் ரூ.42,472 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 260 காசுகள் குறைந்து ரூ.74.10 எனவும், ஒரு கிலோ விலை ரூ.74,100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

IMG 20220310 WA0000 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.