மலைகளின் இளவரசி ஜில் ஜில் கோடைக்கானல் அருகே உள்ள கூக்கால் வனப்பகுதியில் பெரும் பரப்பளவில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ இருந்து வந்த நிலையில், இன்று மேல் மலை பகுதில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் பகல் நேரங்களில் வாட்டி எடுத்தது வருகிறது. இதன் காரணமாகா கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பட்ட நிலங்களில் கட்டு தீயானது ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் மலைப் பகுதியில், ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருவதால்தான் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் அரிய வகை மரங்கள், சுமார் 100 ஆண்டுகள் ஆன பழமையான மரங்களும் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய அதிக வெயில் அடிக்கும் மாதங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால், வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் பயங்கர காட்டு தீயானது ஏற்பட்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த காட்டு தீயானது நேற்று இரவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த காட்டு தீயை அணைப்பதற்கு முன்னதாகவே, கொடைக்கானல் அருகேயுள்ள மேல் மலை வனப்பகுதியில் நேற்று இரவு முதல் மற்றொரு கட்டு தீயானது ஏற்பட்டுள்ளது.
சுமார் பலநூறு ஏக்கரில் இந்த காட்டு தீயாது எரிந்து வருவதால், அப்பகுதில் முழுவதும் உள்ள செடிகள் மற்றும் மரங்கள் முழுவதும் நாசமடைந்து வருகிறது. மேலும் தற்போது ஏற்பட்டு இருக்கக்கூடிய இந்த காட்டு தீ புலிகள் சரணாலயத்திற்கு அருகே எரிந்து வருவதால் அந்த பகுதியில் இருக்க கூடிய வன விலங்குகளும் பாதிக்க பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடந்து கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் இந்த காடு தீயானது பரவி வருவதால் சுற்றுலா பயணகள்அதிர்ச்சியடைந்துள்ளனர்.
