விவசாயிகளை நெல் கொள்முதல் செய்யவிடாமல் திமுகவினர் அராஜகம்! தென்காசியில் பரபரப்பு!

tenkasi 1 - 2026

தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4,000 ஏக்கருக்கும் மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர்செய்த நிலையில் தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் வருடந்தோறும் கடையத்தில் அரசால் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெற்களை விற்பனை செய்து பயனடைவார்கள்.

இந்த நிலையில் இந்தாண்டு திடீரென்று வழக்கமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வைக்காமல், கடையம் அருகே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கானாவூரில் புதியதாக வைத்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

Paddy - 2026

இதனை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரியிடமும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுத்ததை தொடர்ந்து கடையத்தில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் நேற்றுமுன்தினம் துவங்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் நெற்களை கடையம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

விற்பனை நிலையத்திற்க்கு திடீரென அங்கு வந்த தி.மு.க‌ கட்சியினர் அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி திடீர் மோதலில் ஈடுபட்டனர்.

tenkasi 2 - 2026

அப்போது சிறிது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் அதிர்ச்சியுற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகி ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடையம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.

இது குறித்து விவசாயி பேசும் போது , ஒழுங்கா விவசாயி நெல்ல போட்ருக்கான். ஒழுங்கா தொழில் நடக்குது. இங்கனகுள்ள அடியாட்களோட வந்து நின்னுட்டு, ஆபீசரையும் சத்தம் போட, விவசாயியையும் இங்க நெல்லு கொண்டு வராதனு சொல்ல இவன் யாருயா? இவன் ஒரு அரசியல்வாதி நாங்க விவசாயி. விவசாயிகள் நாங்க போராட்டம் பண்ணித் தான் இங்க கொள்முதல் நிலையம் கொண்டு வந்துருக்கோம்.

dmk car - 2026

இங்கன அறுத்து இங்கன போடத் தான் இந்த குடோன நாங்க கேட்டோம். ரொம்ப தூரம் கொண்டு போக எங்க கிட்ட எதுவும் இல்லை. நான் அறுப்பு அறுக்கனும்னு வண்டி தேட போய்ட்டேன். அதுக்குள்ள இங்கன வந்து பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்காங்க

ஒரு வண்டியில வந்துருக்காங்க வந்து இதுமாதிரி அராஜகம் பண்ணுறாங்க. போலீசும் எங்களை பேச விடல. நீங்க உள்ள போங்கனு சொல்லுறாங்க. நான் இப்ப விளக்கம் சொல்லுறேன்ல அதுமாதிரி போலீஸ்காரங்க என் கிட்ட விளக்கம் கேக்கல.

நாங்க விவசாயிகளுக்குள்ள ஆபீசர பாத்தோம். பிரச்னைய சொன்னோம். கலெக்டர் வரை போனோம். எங்க வேணா நீங்க டெண்டர் குடுங்க. எங்களுக்கு இப்ப இது வேணும் என சொன்னோம். குடுத்தாங்க. இப்ப இது செயல்பட்டுக்கிட்டு இருக்கு என விவசாயி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories