விபரீதம் தெரிந்தும் விளையாட்டு.. கிங் கோப்ராக்களுடன் இளைஞர்!

Published:

king cobra - 2026

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில படிப்பினையையும் தருகிறது. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

தற்போதும் ஒரு சுவாரசியமான ஆனால், பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் பாம்பு வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வாரக்ள். ஆனால் ஒரு துணிச்சல்கார இளைஞன், ஒன்றல்ல, மூன்று பாம்புகளை சீண்டுகிறான். சீறும் பாம்பை சீண்டினால் அது சீறும் என்று தெரிந்தாலும், குறும்புக்கார இளைஞன் பாம்புகளை சீண்டுவது பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது.

பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு என்று சொல்வதைப் போல, சீண்டலை சகித்துக் கொண்டு பாம்புகள் சும்மா இருந்தாலும், ஒரு பாம்புக்கு வந்ததே கோபம்! அது சீறத் தொடங்கிவிட்டது. பாம்பின் எதிர்த்தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

பாம்புகள் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படுகின்றன. அவற்றுடன் விளையாட முயற்சிப்பது எவ்வளவு தவறு இருக்கும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கிங் கோப்ராவின் வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பாம்புகளைக் கண்டு அஞ்சாதவர்கள் ஒரு சிலரே, அந்த அஞ்சாநெஞ்சன்களால் மட்டுமே பாம்புகளை கட்டுப்படுத்த முடியும். வைரலாகி வரும் வீடியோவில், காட்டில் ஒரு சிறுவன் மூன்று நாகப்பாம்புகளுடன் விளையாடுவதைக் காணலாம். ஆனால் இறுதியில் பாம்பின் சீறலைக் கண்டு இளைஞர் என்ன செய்தார்?

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த காணொளியில் காட்டுக்குள் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவர், மூன்று ஆபத்தான நாகப்பாம்புகளை நோக்கி பேசிக் கொண்டே வாலைத் தொடுகிறார்.

மிகவும் ரிலாக்சாக, பயமேயிலாமல் அந்த இளைஞன், காலை ஆட்டிக் கொண்டே வாலை தொட்டதும் ஒரு பாம்பு சாந்தமாக இருந்தது.

ஆனால், மற்றொரு பாம்பு, வாலை சீண்டிய இளைஞனை புயல் வேகத்தில் தாக்கியது. கணப் பொழுதில் நடந்த இந்தத் தாக்குதலை எதிர்பாராத இளைஞன் துள்ளி குதித்து எழுகிறான். ஆனால், பாம்பு அவனுடைய பேண்ட்டை பிடித்துவிட்டது.

இந்த வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. அந்த இளைஞனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img