கோவா பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த் …

Published:

கோவா மாநில முதல்வராக பா.ஜ.க வின் பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த கோவா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பா.ஜ.க 20 இடங்களை பிடித்தது. எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. இருப்பினும் சுயேட்சைகளாக வெற்றி பெற்றவர்கள் பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க தயாரானது. இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்யவதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்
கோவா மாநில முதல்வராக பா.ஜ.க வின் பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர்
செய்தியாளர்களிடம் கூறியது, அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு கோவா மாநில முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி.மாநில மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார் .

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
images 2022 03 21T194931.825 - 2026

Related articles

Recent articles

spot_img