மதுரை ரயில்வே கோட்டத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்..

மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட துலுக்கப்பட்டி-கோவில்பட்டி இடையே உள்ள ரெயில் நிலையங்களில் இரட்டை அகலப்பாதைக்கான இணைப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில்களின் போக்குவரத்தில் அடிக்கடி நிகழும் மாற்றத்தால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருவதால் மதுரை-நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க பயணிகள் வலியுருத்துகின்றனர்.

மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) விருதுநகர் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மறுமார்க்கத்தில் மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோயில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் மார்ச் 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16321) நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16322) மதுரை – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128) திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 1 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் (16128) அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) சென்னை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627/ 22628) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16731/ 16732) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மதுரை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் (16730) திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) விருதுநகர் – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் (16235) தூத்துக்குடி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 26, 29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரிலிருந்து புறப்படும் தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (11021) விருதுநகர் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 28, 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் (11022) திருநெல்வேலி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மார்ச் 27 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861) மற்றும் மார்ச் 28 அன்று கன்னியாகுமரி இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவிதேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) விருதுநகர், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

IMG 20220325 WA0047 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories