நோய் தீர்க்கும் மருந்து விலை உயர்கிறது..

Published:

பெட்ரோல் டீசல் பால்பொருட்கள் சமையல் எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலையை 10.7 சதவீதம் உயர்த்தி கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது.

இதனால், கோவிட் உட்பட முக்கிய சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.

10.7 சதவீத விலை உயர்வே, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலை ஆகும். இதனால், அத்தியாவசிய பட்டியலில் உள்ள 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை ஏப்., 1 முதல் உயரும்.

இந்த பட்டியலில் உள்ள பாராசிட்டாமல், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், கோவிட் தொற்றால் மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் உள்ளன.

images 2022 03 26T173313.379 - 2026
ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img