3 மாத குழந்தை ஏழு முறை கைமாறி விற்பனை செய்யப்பட்ட அவல சம்பவம்..

தெலுங்கானா மாநிலத்தில்
மூன்று பெண் குழந்தை பெற்ற தம்பதியிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட 3 மாத குழந்தை ஏழு முறை கைமாறி விற்பனை செய்யப்பட்ட அவல சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை மனோஜ் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப் படைத்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு,

தெலுங்கானா மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி அருகே உள்ள கண்டலாயபேட் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் 3 மகள்களையும் எப்படி வளர்க்க போகிறோமோ? என அவர் பயந்தார். இதனால் அந்த குழந்தையை விற்க முடிவு செய்தார். இதுபற்றி அவர் தனது மனைவியிடம் தெரிவித்தார்.

அதற்கு முதலில்அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் சில நாட்களில் அவர் மனம் மாறினார். பெற்ற குழந்தையை விட்டுக் கொடுக்க மறுத்தார். இருந்த போதிலும் மனைவியின் எதிர்ப்பை மீறி காயத்திரி என்ற புரோக்கர் மூலம் மனோஜ் தனது 3 மாத பெண் குழந்தையை ரூ.70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதையடுத்து காயத்திரி குழந்தை இல்லாத தம்பதிக்கு அந்த குழந்தையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அவர் நலகொண்டா மாவட்டம் பால்கெட் கண்டபிரலு பகுதியை சேர்ந்த பாக்யா நந்து என்பவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

அவர் தனது உறவினர் உதவியுடன் ஐதராபாத்தில் சுக் பகுதியை சேர்ந்த நூர்ஜகான் என்ற பெண்ணிடம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்த குழந்தை ஐதராபாத் ஆரியன்னகுடாவுக்கும், விஜயவாடா பென்ஸ் சர்க்கிளுக்கும், விஜயவாடா குல்லபுடி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் மாறி, மாறி விற்கப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியது,

கடைசியாய அந்த குழந்தை ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எல்லுரு என்ற இடத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக மனோஜ் மனைவி காயத்திரி மங்களகிரி போலீஸ் சூப்பிரண்டு ராம் பாபுவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து குழந்தையை மீட்க அவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக அவர் தனிப்படை அமைத்தார்.

அவர்கள் முதலில் மனோஜிடம் விசாரணை நடத்தியதில் அவர் குழந்தையை விற்பனை செய்ததை ஒப்புப் கொண்டார்.அதன் பிறகு போலீசார் நடத்திய விசரணையில் கடந்த 2 மாதத்தில் பச்சிளம் குழந்தை மங்கள கிரியில் இருந்து மேற்கு கோதாவரி வரை சங்கிலி தொடர் போல் அடுத்தடுத்து 7 தடவை கைமாறி பலரிடம் விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை மனோஜ் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப் படைத்தனர்.

விசாரணையில் இதன் பின்னணியில் ஒரு பெரிய குழந்தை விற்பனை கும்பல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களிடம் அவர்களது வறுமையை பயன்படுத்தி குழந்தைகளை விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.

இதில் இதுவரை எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

images 2022 03 30T122520.195 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories