images 2022 03 31T090532.985 - 2026

ரயில் பயணிகள் கவனிக்கவும்..

சற்றுமுன்

ஓடும் ரயிலில் தேவையில்லாமல்,
அவசிய காரணமின்றி
அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் நிறுத்தப்பட்டால் ஓரு  ஆண்டு சிறை தண்டனை’ என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

images 2022 03 31T090532.985 - 2026
images - 2026

ரயில்களில் உரிய காரணமின்றி, அபாய சங்கிலியை இழுத்ததற்காக, 1369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1,043 பேர் பிடிக்கப்பட்டு 7.11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

தேவையற்ற காரணங்களுக்காக, அபாய சங்கிலியை இழுப்பதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது, அவசர உதவி, குறைகள் இருந்தால், ஊழியர் அல்லது டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
ரயில்வே உதவி மைய எண் 139க்கு தகவல் தெரிவிக்கலாம். railmadad என்ற, மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்து, தகவல்கள் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதை விடுத்து, உரிய காரணமின்றி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், ஒரு ஆண்டு சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.