ஜாகீர் உசேன் மேல் குவியும் பாலியல் புகார்! தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது… இசைப்பள்ளி ஆசிரியை வேதனை!

Jakir Hussain - 2026

கரூரில் இசைப்பள்ளி ஆசிரியைக்கு பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், தமிழக கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இவர் கரூர் மாவட்ட இசை பள்ளிக்கு, ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியாற்றி வந்த இசைப்பள்ளியின் ஆசிரியைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பிஉள்ள புகார் கடிதம்:

நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப்., 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், எங்கள் பள்ளிக்கு ஆய்வு வந்தார்.அனைவருக்கும் மத்தியில், என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசினார். பின், தலைமை ஆசிரியை அறைக்கு, என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார்.

அங்கு, என் தோள்பட்டை மேல் கை வைத்து, இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து, ‘இப்படி நடனமாட வேண்டும்’ என, சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

இந்த நிகழ்வு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ‘ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு, உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்’ என, ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். அதன்பின், கதவை திறந்து வெளியேறி விட்டேன்.

இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. இதற்கு பின் நாம் உயிர் வாழ வேண்டுமா? என்று எண்ணி, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.

நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ, அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பிஉள்ளேன். இப்பிரச்னை மீதான நடவடிக்கையால், வரும் காலங்களில் பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

jahir Hussain 1 1 - 2026

இதேபோல, சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது, பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் மீது தொடர்ந்து பாலியல் தொல்லை புகார் வந்து கொண்டிருக்கும் வேளையில், ஏப்ரல் மாதம் நடக்கும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நடன பயிலரங்கம் நடத்துவது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இசைப்பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories