சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,820க்கு விற்பனையாகிறது.
கடந்த மாதத்தில் தங்கம் விலை போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 22-ம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24ம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7ம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.4,820க்கும், 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை சற்று சரிந்து காணப்பட்டது.