திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது பரபரப்பு..

Published:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்றும் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கடல் சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து விலகிச்சென்றனர். 

திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலையிலும் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியதில், பாறைகள் வெளியே தெரிய தொடங்கின. இதனால் கடற்கரையில் இருந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.

images 2022 03 24T123739.739 - 2026

Related articles

Recent articles

spot_img