எந்திரன் பட விவகாரம்: ஷங்கருக்கு எதிரான புகாரில் விசாரணை மேற்கொள்ள அனுமதி!

Published:

sankar dr - 2026

எந்திரன் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிரான புகார் குறித்து எழும்பூர் நீதிமன்றம் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. காப்புரிமை மற்றும் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் இருவர் மீதான மோசடி புகாரை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும், காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் மீதான புகாருக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் எனக் கூறினார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img