சட்டசபையில் அதிமுக, பா.ஜ.க சொத்து வரியை திரும்ப பெறக்கோரி வெளிநடப்பு-முதல்வர் வரி உயர்வுக்கு விளக்கம்..

Published:

இன்று துவங்கிய சட்டசபை மானியகோரிக்கை விவாத கூட்டத்தொடரில் அதிமுக, பா.ஜ.க சொத்து வரியை திரும்ப பெறக்கோரி கோரிக்கை விடுத்து இரு கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்று துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரிலும் அதிமுக, பா.ஜ.க சொத்து வரியை திரும்ப பெறக்கோரி கோரிக்கை விடுத்தன. இதற்கு முதல்வர் ஸ்டாலின், சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

முதல்வரின் இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பா.ஜ., கட்சிகள் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பியதுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம். கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை அரசு சுமத்தியுள்ளது. உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சொத்துவரியை உயர்த்தியுள்ளனர். வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின்,
சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாத்தின்போது சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக, பாஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு விளக்கமளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும்.ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி மாற்றப்பட்டுள்ளது. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. 83 சதவீத மக்களை இந்த வரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை. தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.
முன்னதாக துபாய் பயணம் மேற்கொண்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன். ஐக்கிய அரபு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். எனது துபாய் பயணம் மூலம் ரூ.6100 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 12,500 பேருக்கு வேலை கிடைக்கும். வணிக வளாகம் அமைக்க லூலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில், 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 130 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Assembly Session AIADMK Press Meet Photo 18 - 2026

gallerye 123751295 3001306 - 2026

Related articles

Recent articles

spot_img