thief - 2026

கோவிலில் திருடச் சென்று ஓட்டையில் சிக்கிய திருடன்! மீட்ட மக்கள்!

சற்றுமுன் இந்தியா கிரைம் நியூஸ்
thief - 2026

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜடிமுடி கிராமத்தில் ஒரு அம்மன் கோயில் உள்ளது.

பாப்பாராவ் என்ற இளைஞர் ஒருவர் அந்த கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடிக்கொண்டு அங்கிருந்த ஓட்டை வழியாக வெளியேற முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது அவருடைய பாதி உடல் கோயிலுக்கு வெளியிலும், மீதி உடல் கோயிலுக்கு உள்ளேயும் சிக்கிக்கொண்டது.

இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். அதன் பிறகு அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மது போதையில் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் பாப்பாராவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.