சபரிமலை பக்தர்களுக்கு.. ஏப்ரல் 10 முதல்.. தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

sabharimalai - 2026

கேரளா மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம் ஆகும்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவிலுள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை.

இப்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

சென்ற 2 வருடங்களுக்கு பின் ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருப்பதால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐயப்பன் கோவிலில் பூஜைக்கட்டணம் முதல் அரவணை பாயசம், நெய் உள்ளிட்ட பிரசாதங்கள் வரையிலும் அனைத்தின் விலையையும் உயர்த்தப்போவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து இருக்கிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அந்த வகையில் படி
பூஜை கட்டணம் ரூபாய் 1,15,000-ல் இருந்து ரூபாய் 1,37,900 ஆகவும்,
சகஸ்ரகலசம் கட்டணம் ரூபாய் 80,000-ல் இருந்து ரூபாய் 91,250 ஆகவும், உதயாஸ்தமன பூஜை கட்டணம் ரூபாய் 50,000ல் இருந்து ரூபாய் 61,800 ஆகவும், உற்சவபலி கட்டணம் ரூபாய் 30,000-ல் இருந்து ரூபாய்37,500 ஆகவும், களபாபிஷேகம் கட்டணம் ரூபாய் 22,500-ல் இருந்து ரூ.38,400 ஆகவும்,
தங்க அங்கி சார்த்துதல் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000 ஆகவும், புஷ்பாபிஷேகம் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆகவும்,

சதகலசம் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆகவும்,
அஷ்டாபிஷேகம் கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும்,
உச்ச பூஜை கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆகவும்,
பகவதி சேவை கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆகவும்,
உஷ பூஜை கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும்,
கணபதி ஹோமம் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ. 375 ஆகவும்,
கெட்டு நிறைத்தல் கட்டணம் ரூ.250ல் இருந்து ரூ.300-ஆகவும்,
அபிஷேக நெய்(100 மி.லி) கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆகவும்,
நீராஞ்சனம் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆகவும்,
அரவணை கட்டணம் ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும்,
அப்பம் (ஒரு பாக்கெட்) ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories