- 2026

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இது கட்டாயம்.. தேர்வுத்துறை உத்தரவு!

சற்றுமுன் கல்வி தமிழகம்
- 2026

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட்டு, அவை செயல்பாட்டில் இருக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் காவலர் பணியில் இருக்க வேண்டும் எனவும், இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம்,பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முதன்மை கண்காணிப்பாளராக இருக்க கூடாது எனவும், தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் மாதிரி தேர்வுக்கு முன்பே வினாத்தாள் லீக் ஆகி வரும் நிலையில், இத்தகைய உத்தரவை தேர்வுத்துறை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.