குன்னூர் யானை வழித்தடத்தில் நீதிபதிகள் ஆய்வு..

Published:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சாலை விரிவாக்கப் பணிகளால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலம் அருகே உள்ள யானை வழித்தடத்தில், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.இதனால் யானைகள் இடம் பெயருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தால் யானைகள் சிரமத்துக்குள்ளாவதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பாக 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் தலைமையில், நீதிபதிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை யானை வழித்தடங்களை ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறையினர் நெடுஞ்சாலை துறையினரிடம் யானைகளுக்கு பாதிப்பின்றி பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதில் ஒரு யானை மட்டுமே செல்வதற்கு வழி விடப்பட்டுள்ளது. இந்த இடம் யானைகள் செல்ல போதுமானதாக இல்லை. யானைகள் எளிதாக செல்லும் வகையில் மேலும் அதிகளவிலான இடங்கள் விடப்பட வேண்டும். இதனை செயல் படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அதே நேரத்தில் வாகனங்கள் செல்லும் போது மக்களுக்கும் பாதிப்பின்றி இரவு நேரங்களில் அதிக பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினர். தொடர்ந்து நெடுஞ்சாலை ரயில்பாதை இணையும் மரப்பாலம் பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கல்லார் மற்றும் மதுக்கரையில் ஆய்வு மேற்கொண்டனர் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு இங்கு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில், நீதிபதிகள் நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்ததில் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தானியங்கி தண்ணீர் ஏடிஎம்களை பார்வையிட்டு, தண்ணீர் அருந்தி அதன் தரத்தை ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்திடம் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். உதகை அருகே வென்லாக் பள்ளத்தாக்குப் பகுதியை பார்வையிட்ட பின் மரங்களை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது பேசிய நீதிபதிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால் அதற்கு தயங்க வேண்டாம் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, “நீலகிரி மாவட்டத்தில் இயற்கை காடுகளை பாதுகாப்பதோடு, வனத்துறைக்கு வருவாய் ஈட்டும் வகையில் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்” என்றார்.பின்னர், முதுமலை புலிகள் காப்பகம் சென்ற நீதிபதிகள் அங்கு உண்ணிச்செடிகள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணியை பார்வையிட்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில்‘ஸ்லைடு ஷோ’ பார்த்தனர். பின்னர் கார்குடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் களை எடுக்கும் பணியை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Tamil News large 3004358 - 2026
786412 1 - 2026

Related articles

Recent articles

spot_img