பைக்க உருட்டிகிட்டு தான் போகணும்.. ஓட்டக்கூடாது: தடைப் போடறது யார் தெரியுமா..?

Published:

dog - 2026

நாய்கள் பலருக்கு பிடித்தமானவையாக இருந்தாலும் சிலருக்கு பயவுணர்வை ஏற்படுத்துவதாக அமைகிறது. சில தெரு நாய்கள் வீதிகளில் அலைந்துகொண்டு பலரையும் துரத்தி பயத்தை ஏற்படுத்துகின்றன.

இங்கு வைரலாகியுள்ள வீடியோவில் நாய் ஒன்று பைக்கில் வந்த இருவரை சாலையை கடக்கவிடாமல் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாய்களின் செயல் அந்த நபர்களுக்கு பயத்தை கொடுத்தாலும், அந்த காட்சியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அது நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நகைச்சுவையான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரேண்டம் ஃபேக்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சாலையில் இரண்டு நாய்களும் அதற்கு எதிரே இரண்டு நபர்கள் பைக்கிலும் நின்றுகொண்டு இருக்கின்றனர். பைக்கை ஓட்டவிடாமல் அந்த நாய் அவர்களை தடுத்து நிறுத்துகிறது,

பைக்கை ஸ்டார்ட் செய்தால் அவர்களை நோக்கி அந்த இரண்டு நாய்கள் குரைக்கிறது. பின்னர் அந்த இருவரும் பைக்கிலிருந்து கீழே இறங்கிவிட்டு வண்டியை தள்ளிக்கொண்டே நாய் நிற்கும் இடத்தை கடக்கின்றனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

சிறிது தூரம் சென்றதும் பைக்கை ஸ்டார்ட் செய்கிறார்கள், அவர்கள் வண்டியை தள்ளிக்கொண்டு கடக்கும் வரை அமைதியாக இருந்த நாய்கள் பைக்கை ஸ்டார்ட் செய்ததும் வேகமாக குரைத்தபடி அவர்களை நோக்கி விரட்டிக்கொண்டு ஓடுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நபர்களிடமும், இணையத்தில் பார்த்த நபர்களிடமும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளையும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு கமெண்ட் செக்ஷனை நிரப்பியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img