ஆந்திராவில் ரயில் மோதி ஐவர் பலி..

Published:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படுவா கிராமம் அருகே கோனார்க் எக்ஸ்பிரஸ் மோதியதில் 5 பயணிகள் உயிரிழந்தனர்.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது,
கவுகாத்தி விரைவு வண்டியில் பயணித்த 5 பேர்,  சங்கிலியை பிடித்து இழுத்ததால் அந்த ரெயில் பாதியில்  நிறுத்தப்பட்டது. புகை வந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விரைவு ரயிலை பயணிகள் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது
உடனே 5 பயணிகளும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விபத்தில் மேலும் ஒருவர் பலியானதால் மொத்தம் 6பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

andhra - 2026
IMG 20220412 105858 - 2026

Related articles

Recent articles

spot_img