images 10 2 - 2026

வைகை, பாண்டியன் ,பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றம் ..

சற்றுமுன்

சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வைகை, பாண்டியன் ,பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 14 முதல் மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.00, 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 05.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

சென்னை – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 03.10, 05.15, 05.35, 05.42, 5.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 03.05, 05.10, 05.30, 05.37, 05.53, காலை 06.07, 06.30, 06.43, 07.00, 07.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 08.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மதுரை – சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.10 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.30 மணிக்கு புறப்படும்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

மதுரை – பழனி விரைவு சிறப்பு ரயில் (06480) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.30, 07.38, 07.48 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.35, 07.44, 07.52 மணிக்கு புறப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

images 10 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.