சுபகிருது தமிழ்புத்தாண்டு எப்படி இருக்கும்?

Published:

சுபகிருது தமிழ்புத்தாண்டு இப்படித்தான் பலன்கள் இருக்குமாம்.

சித்திரை வருட லக்னமாக ரிஷபம் அமைந்து லக்னாதிபதி பத்தில் செவ்வாயுடன் நிற்பதால் சுய தொழில் விருத்தியாகும். விளைச்சல் நன்றாக இருக்கும். ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தங்க சுரங்கம் மற்றும் புதையல்கள் வெளியே வரும். மக்களுக்கு வருமானம் உயர்வும் உண்டாகும். கலைஞர்கள் முன்னேற்றம் உண்டாகும். உஷ்ண நோய் உண்டாகும். குருதி சோகை சார்ந்த நோய் ஒருவகை வைரஸ் மூலம் பரவ வாய்ப்புள்ளது.

ராஜாவாக சனி இருப்பதால் அந்நிய நாட்டினரின் தலையீடுகள் உள்நாட்டில் உண்டாகும். கூலி உழைப்பாளர்கள், கீழ் நிலையில் உள்ள மக்கள், பணியாட்கள் சக்தி கூடும். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பலம் கூடும். மதமாற்றம் அடைவோருக்கு பாதிப்பு உண்டாகும்.

மந்திரி குரு ஆவதால், தங்க புதையல் கிடைக்கும். ஆன்மீகம் விருத்தியாகும். நாடெங்கும் நீதியும் சட்டமும் விருத்தியாகும். போதை பொருட்கள் வியாபாரம் பண்ணுபவர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். உலக அமைதி உண்டாகும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். யாத்திரைகள் பெருகும் என்கிறார்கள் பிரபலமான ஜோதிட பண்டிதர்கள்.

images 55 1 - 2026
ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img