ட்யூசன் படிக்கச் சென்ற மாணவி! 7 மாதம் கர்ப்பமாக்கிய ஆசிரியர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் மதுரை
vankodumai 1 1 - 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் மல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் மாலை நேரத்தில் வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.

அப்போது யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவுக்கு ஆட்படுத்தியுள்ளார்.

சில மாதங்களில் சிறுமியின் வயிறு வீங்கிய தால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது இவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.